search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷீலா - பரஞ்ஜோதி
    X
    ஷீலா - பரஞ்ஜோதி

    சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் - சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் முரண்பாடு

    சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்து கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். #Sabarimalatemple #SC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

    அவர்களை கட்டுப்படுத்தி சபரிமலைக்கு சென்ற பெண்களை போலீசார் சன்னிதானம் அழைத்துச் சென்றனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்த தகவலை கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில், சபரிமலையில் கோவில் நடைதிறந்த பின்பு 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்படி கேரள அரசு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

    மேலும் கோவிலில் தரிசனம் செய்த 51 பெண்களின் பெயர் பட்டியலையும் தாக்கல் செய்தனர்.

    கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களும் இதுபற்றி ரகசிய ஆய்வு செய்தனர். மேலும் பட்டியலில் இடம் பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வயது விவரங்களை கேட்டனர்.

    அதில், பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த வயதும், அவர்களின் உண்மையான வயதிலும் வித்தியாசம் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த ஷீலா என்ற பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாகவும், அவருக்கு 48 வயது என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுபற்றி கேரள ஊடகங்கள் சென்னையில் இருந்த ஷீலாவை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்ததாக கூறினார். அப்போது இன்டர்நெட் மையத்தில் விவரங்களை பதிவு செய்தபோது, வயதை 52 என்பதற்கு பதில் 48 என்று குறிப்பிட்டு விட்டனர்.

    இதனை நான், உடனே கண்டுபிடித்து இன்டர்நெட் ஊழியர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் கோவிலுக்கு செல்லும்போது ஆதார் அட்டையை காட்டுங்கள் என்று கூறிவிட்டனர். நான், கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த போலீசாரிடம் வயது விவரம் குறித்து தெரிவித்தேன். மேலும் உண்மையான வயதை குறிப்பிட ஆதார் அட்டையையும் காண்பித்தேன். போலீசார் ஆன்லைன் விவரங்களை மட்டுமே பதிவு செய்து கொண்டனர் என்றார்.

    இதுபோல சென்னையைச் சேர்ந்த பரஞ்ஜோதி என்ற 47 வயது பெண்ணும் சபரிமலையில் தரிசனம் செய்ததாக கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற பரஞ்ஜோதியின் பெயர் ஆண் என்றும், பெண் என்றும் டிக்கெட்டில் பதிவாகி இருப்பதை காணலாம்.


    ஆனால் பரஞ்ஜோதி பெண் அல்ல, ஆண் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த வசந்தி உள்பட பலரும் தங்களது வயது 50-க்கு மேல் என்று கூறி உள்ளனர்.

    கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில் 10-க்கும் மேற்பட்டோரின் வயது குறித்த விவரங்களில் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேரள அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

    சபரிமலைக்கு சென்ற இளம்பெண்கள் யாரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். பாதுகாப்பு கருதி குடும்ப உறுப்பினர்களும், மறுப்பு தெரிவித்திருக்கலாம். சபரிமலையில் நடந்து வரும் போராட்டம் காரணமாக அவர்கள் இவ்வாறு கூறி இருக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கை போலியானது. தரிசனத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்த கம்யூனிஸ்டு பெண் ஆர்வலர்களின் பெயர்களை பட்டியலில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதனால் சபரிமலை வழக்கின் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு பாதிப்பு இருக்காது என்றார்.  #Sabarimalatemple #SC
    Next Story
    ×