என் மலர்
செய்திகள்

திருப்பதியில் பக்தர்கள் போல் நடித்து கொள்ளையடித்த 9 பேர் கைது
திருப்பதி:
திருப்பதியில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடித்து வந்த 9 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
திருப்பதியில் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் குற்றங்கள் புரிபவர்களை கண்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு கும்பல் பக்தர்கள் போல் நடித்து சகபயணிகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பணம், நகை கொள்ளையடித்து வந்ததை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டறிந்தனர். அந்த கும்பல் தங்கியிருந்த இடத்துக்கு சென்று 5 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 100 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் ரூ. 30 ஆயிரம் ரொக்கம், ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.
கைது செய்யப்பட்டவர்கள் கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த பேலா (45), ரேணுகா (55), கார்த்திக் (20), சந்தோஷ் (28), வாணிஸ்ரீ (50), சவிதா (30), நாகராஜூ (21), மது (20), அனூப் (24) என்பது தெரியவந்தது.தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இவர்க்ள் அனைவரும் திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.