search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்
    X

    சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்

    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய ‘ரோவர்’ எந்திரத்துடன் சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #Chandrayaan2 #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் சில சோதனைகள் இன்னும் முடிவடையாததால், சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். அதில் ரோவர் நகரும் ஆய்வு எந்திரம் பொருத்தப்படும். அந்த வாகனம், நிலவில் தரையில் இறங்கி ஆய்வு செய்யும். அது 500 மீட்டர் சுற்றளவுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.



    இஸ்ரோ வெளிநாடுகளிலும் தரை கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. அது ரஷியா, ஜப்பான் நாடுகளாக இருக்கலாம். இஸ்ரோ டி.வி.யை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டுக்குள் இஸ்ரோ டி.வி. தொடங்கப்படும்.

    பூடான் நாடு, தங்கள் நாட்டில் தரை கட்டுப்பாட்டு மையத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆதித்யா விண்கலம் 2020-ம் ஆண்டு விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது சூரியனை ஆய்வு செய்யும்.

    இவ்வாறு சிவன் கூறினார். #Chandrayaan2 #ISRO #Sivan 
    Next Story
    ×