search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக- எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை 31ந்தேதி வரை ஒத்திவைப்பு
    X

    அதிமுக- எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை 31ந்தேதி வரை ஒத்திவைப்பு

    மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 31-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று கூடியது.

    பாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

    இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது அ.தி.மு.க., காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் எழுந்து தங்கள் மாநில பிரச்சனைகளை எழுப்பினார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்தும், தெலுங்குதேசம் எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டும் கோ‌ஷம் எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்கள் ரபேல் போர் விமான பிரச்சனை பற்றி பேசினார்கள்.

    இதனால் அமளி ஏற்பட்டதைத்தொடர்ந்து பாராளுமன்றம் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் 31-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. #WinterSession #RajyaSabha #TripleTalaq
    Next Story
    ×