என் மலர்
செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் - இரு ராணுவ அதிகாரிகள் வீரமரணம்
காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த இரு ராணுவ அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். #Armyofficerskilled #Pakistanviolates #Kupwaraceasefire
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் , குப்வாரா மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று பகல் சுமார் 12 மணியளவில் இந்திய நிலைகளின்மீது துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்திய வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒரு இளநிலை அதிகாரி வீரமரணம் அடைந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு இளநிலை அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இன்றைய தாக்குதலில் பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. #Armyofficerskilled #Pakistanviolates #Kupwaraceasefire
Next Story






