என் மலர்

  செய்திகள்

  வாஜ்பாய்- எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்
  X

  வாஜ்பாய்- எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்கள், தற்போதைய எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. #WinterSession #ParliamentSession
  புதுடெல்லி:

  பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று  காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  மழைக்கால கூட்டத் தொடருக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் குமார், பீகார் எம்பிக்கள் போலா சிங், மவுலானா அஸ்ரருல் ஹக், கேரள எம்பி எம்.ஐ.ஷாநவாஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

  அடுத்த மாதம் 8-ந் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. 20 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள் மற்றும் ஒரு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. #WinterSession #ParliamentSession
  Next Story
  ×