என் மலர்

  செய்திகள்

  ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் 8ம் கட்ட வாக்குப்பதிவு
  X

  ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் 8ம் கட்ட வாக்குப்பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தலுக்கான 8-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #JKPanchayatPolls
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரில் 9 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 17-ம் தேதியில் இருந்து இதுவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் 73.8 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

  இந்நிலையில், இன்று 8ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. 331 பஞ்சாயத்து தலைவர்கள், 2007 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்து அமைப்புகளில் 43 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 681 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 2633 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 361 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளதால், அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #JKPanchayatPolls

  Next Story
  ×