என் மலர்

  செய்திகள்

  பாதுகாப்பு துறை சார்பில் கொள்முதல் கூட்டம் - ரூ.3,000 கோடி மதிப்பில் போர் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்
  X

  பாதுகாப்பு துறை சார்பில் கொள்முதல் கூட்டம் - ரூ.3,000 கோடி மதிப்பில் போர் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற ராணுவ கொள்முதல் குழு கூட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு போர் ஆயுதங்களை வாங்க இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. #DefenceMinistry #NirmalaSitharaman
  புதுடெல்லி:

  இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் போர் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்காக ராணுவ கொள்முதல் குழு கூட்டம் இன்று பாதுகாப்பு துறை சார்பில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில், இந்திய கப்பற்படையில் உள்ள 2 கப்பல்களுக்காக பிரமோஸ் ஏவுகணைகள் வாங்குவது மற்றும் இந்திய ராணுவத்தின் அர்ஜுன் பீரங்கிக்கான மீட்பு வாகனங்களை வாங்குவது உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

  இந்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட போர் ஆயுதங்கள் சுமார் ரூ.3,000 கோடி மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
  #DefenceMinistry #NirmalaSitharaman
  Next Story
  ×