என் மலர்

  செய்திகள்

  தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ரூ.15 லட்சம் கஞ்சா கடத்தல்- 3 வாலிபர்கள் கைது
  X

  தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ரூ.15 லட்சம் கஞ்சா கடத்தல்- 3 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  கொழிஞ்சாம்பாறை:

  கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி 3 வாலிபர்கள் இருந்தனர்.

  அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் அவர்கள் குருவாயூரை சேர்ந்த சரத் (வயது 24), கோகுல் (24) மற்றும் ரஞ்சித் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கூறும்போது,

  தமிழ்நாட்டில் இருந்து கஞ்சாவை கடத்தி இங்குள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு விற்பனை செய்ய இருந்ததாக கூறினர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதிப்பு ரூ.15 லட்சம் என்று போலீசார் கூறினர். #tamilnews
  Next Story
  ×