என் மலர்
செய்திகள்

ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயரை மாற்றுவோம்- பாஜக
தெலுங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயரை பாக்யா நகர் என்று மாற்றுவோம் என தேர்தல் பிரசாரத்தில் ராஜாசிங் தெரிவித்துள்ளார். #BJP #TelanganaElection2018
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், பாரதிய ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், கலைக்கப்பட்ட சட்டசபையின் எம்.எல்.ஏ.வுமான ராஜாசிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தெலுங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் வளர்ச்சி பணிக்கு முதல் முக்கியத்துவம் கொடுப்போம்.
அடுத்து 2-வது முக்கியத்துவமாக மாநிலத்தின் பல்வேறு நகரங்களின் பெயர்களும் மாற்றப்படும்.
ஐதராபாத் பெயரை பாக்யா நகர் என்று மாற்றுவோம். இந்த நகரத்துக்கு 16-ம் நூற்றாண்டுக்கு முன்பு பாக்யா நகர் என்றுதான் பெயர் இருந்தது.
அப்போது இந்த பகுதியை கைப்பற்றி ஆட்சி நடத்திய குதிப் ஷகாதீஸ், நகரத்தின் பெயரை ஐதராபாத் என்று மாற்றினார். எனவே, பழைய பெயரையே மீண்டும் சூட்டுவோம்.
இதேபோல் செகந்திரா பாத், கரீம்நகர் மற்றும் பல்வேறு நகரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டு இந்த மாநிலத்துக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்த தலைவர்கள் பெயரை சூட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TelanganaElection2018

Next Story