என் மலர்

  செய்திகள்

  பலியான ஆசிரியை பிந்து.
  X
  பலியான ஆசிரியை பிந்து.

  செம்மீன் பிரியாணி சாப்பிட்ட ஆசிரியை பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநிலம் ஆலப்புழாவில் சக ஆசிரியர் அளித்த செம்மீன் பிரியாணி சாப்பிட்ட ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  கொழிஞ்சாம்பாறை:

  கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பிந்து (வயது 40). இவர் மயநாட்டில் உள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்தார்.

  பிந்து மதியம் சக ஆசிரியை, ஆசிரியர்களுடன் மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். அதேபோல் நேற்றும் வழக்கம்போல் ஆசிரியகளுடன் பிந்து சாப்பிட்டார். அப்போது ஒரு ஆசிரியர் தான் கொண்டு வந்திருந்த செம்மீன் பிரியாணியை மற்ற ஆசிரியர்களுக்கு பகிர்ந்தளித்தார். அதனை ஆசிரியை பிந்துவும் வாங்கி சாப்பிட்டார்.

  சாப்பிட்டு முடித்த பின்னர் மதியம் வழக்கம்போல் வகுப்பில் இந்தி பாடத்தை நடத்தினார். அப்போது பிந்துவின் உடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. உடல் முழுவதும் கொப்பளம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

  அதிர்ச்சியடைந்த மற்ற ஆசிரியர்கள் பிந்துவை மீட்டு பரவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பிந்து பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து பரவூர் போலீசார் விசாரணை நடத்தினர். செம்மீன் சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு உணவு வி‌ஷமாகி பிந்து உடனடியாக இறந்து விட்டதாக முதல் கட்டவிசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×