என் மலர்

  செய்திகள்

  மேற்கு வங்காளத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசு வெடித்த 200 பேர் கைது
  X

  மேற்கு வங்காளத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசு வெடித்த 200 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 200 பேர்களை போலீசார் கைது செய்தனர். #WestBengal #firecrackers #Diwali
  கொல்கத்தா:

  தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. மேலும் குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.

  மேற்கு வங்காளத்தில் தீபாவளியுடன், காளி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடிய மக்கள் அதிக அளவு பட்டாசுகளை வெடித்ததுடன், வாணவேடிக்கைகளையும் நிகழ்த்தினர். இதனால் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் முழுவதும் வண்ணமயமாகவே காட்சியளித்தன.  இதில் அனுமதிக்கப்பட்ட டெசிபலுக்கு அதிகமான ஒலி எழுப்பும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இவ்வாறு தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்தவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்த 2 மணி நேரத்தை தாண்டியும் பட்டாசு வெடித்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

  இவ்வாறு நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மாநிலம் முழுவதும் 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதில் கொல்கத்தா நகரில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #WestBengal #firecrackers #Diwali 
  Next Story
  ×