search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள முதல் மந்திரியின் ஜாதி பெயரை கூறி திட்டிய பெண் கைது
    X

    கேரள முதல் மந்திரியின் ஜாதி பெயரை கூறி திட்டிய பெண் கைது

    சபரிமலை போராட்டத்தில் நேரலையின் போது முதல்-மந்திரியை ஜாதி பெயரை கூறி திட்டிய மூதாட்டியை ஆரண்முலா போலீசார் கைது செய்தனர். #PinarayiVijayan #Sabarimala

    கொழிஞ்சாம்பாறை, அக்.27-

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தபோதும் கேரளாவில் சில பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்த்து கடந்த 1 மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    சபரிமலையில் நடைதிறக்கப்பட்டபோது சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அய்யப்பன் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று பெண்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொலைக்காட்சிகள் நேரடி ஒலிபரப்பு செய்தன.

    அவ்வாறு ஒரு டி.வி.யில் பத்தினம்திட்டா சிறுகோல் கிராமத்தை சேர்ந்த சிவபிள்ளையின் மனைவி மணியம்மாள் (வயது 66) என்ற மூதாட்டி பேட்டி எடுத்தகொடுத்த நேரலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் ஜாதி பெயரை கூறி திட்டினார்.

    இது நாடு முழுவதும் ஒலிபரப்பானது. இதனைத்தொடர்ந்து சமூக வலை வளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து ஆரண்முலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போராட்டத்தின்போது கேரள முதல்-மந்திரி வெளிநாடு சென்றிருந்தார்.

    அவர் நாடு திரும்பியதும் உயர் போலீஸ் அதிகாரிகள் இது குறித்து அவரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்-மந்திரியை ஜாதி பெயரை கூறி திட்டிய மூதாட்டி மணியம்மாளை ஆரண்முலா போலீசார் நேற்று கைது செய்தனர். * * * கைது செய்யப்பட்ட மணியம்மாள்.

    Next Story
    ×