என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி கார்பரேஷன் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது
    X

    டெல்லி கார்பரேஷன் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது

    தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 2 கொள்ளையர்களை போலீசார் இன்று கைது செய்தனர். #CorporationBank
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் வங்கி. இதன் கிளை துவாரகா பகுதியில் உள்ள கைரா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் கார்ப்பரேஷன் வங்கிக்குள் ஒரு கும்பல் திடீரென நுழைந்தது. அவர்கள் கேஷியர் கவுண்டருக்கு சென்று துப்பாக்கியால் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    இதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்களை தாக்கி 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த கேஷியர் சந்தோஷ்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 19 வயது வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கார்பரேஷன் வங்கி கொள்ளையில் தொடர்புடைய சோனிபேட் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் உள்பட 2 பேரை இன்று கைது செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட மற்ற கொள்ளையர்களை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளனர். #CorporationBank
    Next Story
    ×