என் மலர்
செய்திகள்

டெல்லியில் துணிகரம் - பட்டப்பகலில் வங்கி கேஷியரை சுட்டுக் கொன்று ரூ.2 லட்சம் கொள்ளை
டெல்லியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் வங்கிக்குள் நுழைந்து கேஷியரை சுட்டுக் கொன்று 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #CashLoot #CoprorationBank
புதுடெல்லி;
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது கார்ப்பரேஷன் வங்கி. இதன் கிளை துவாரகா பகுதியில் உள்ள கைரா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
இன்று மதியம் கார்ப்பரேஷன் வங்கிக்குள் 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அவர்கள் கேஷியர் கவுண்டருக்கு சென்று துப்பாக்கியால் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதைத் தொடர்ந்து, அங்கிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து விட்டு அவர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர்.
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த கேஷியர் சந்தோஷ் குமாரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வரும் வழியில் அவர் உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாரர் விசாரணை நடத்தி வருகின்றனர். #CashLoot #CoprorationBank
Next Story