search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் அட்டை இல்லாததால் டெல்லி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு
    X

    ஆதார் அட்டை இல்லாததால் டெல்லி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு

    டெல்லி அரசு மருத்துவமனையில் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் 9 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Aadhaar
    புதுடெல்லி  :

    உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா நகரை சேர்ந்த சிறுமி பிரியா (வயது 9) உடல் நலம் பாதிக்கப்பட்டதால் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.  ஆனால், சிறுமியிடம் ஆதார் அட்டை இல்லை என்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.  

    இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே டெல்லி மாநில பாரதீய ஜனதா தலைவர் மனோஜ் திவாரி, மத்திய மந்திரி நட்டாவை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பக்கத்தில் இது தொடர்பான தகவலை பதிவிட்டார். இந்த சிறுமிக்கு சிகிச்சை கிடைப்பது தவிர்த்து நவராத்திரிக்கு வேறு எந்த சிறந்த விசயமும் கிடையாது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Aadhaar
    Next Story
    ×