search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் 11 நகராட்சிகளுக்கு முதல் கட்ட தேர்தல் - 63.83 சதவிகித வாக்குப்பதிவு
    X

    ஜம்மு காஷ்மீரில் 11 நகராட்சிகளுக்கு முதல் கட்ட தேர்தல் - 63.83 சதவிகித வாக்குப்பதிவு

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 11 நகராட்சிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 63.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #JammuKashmirElection
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    அதன்படி நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றது. 11 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 584 வாக்குச்சாவடிகளில்  63.83% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தித்தி இருந்தனர். அதனை மீறி சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் இருந்த சில வாக்குச்சாவடிகளில் வெறும் 1 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. 

    தேர்தலை ஒட்டி ராணுவம், துணை ராணுவம், மாநில போலீசார் என பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.  #JKElection #LocalBody
    Next Story
    ×