என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலையில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம்
Byமாலை மலர்5 Oct 2018 10:10 AM GMT (Updated: 5 Oct 2018 10:10 AM GMT)
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆண்மை நீக்க வழக்கில் ஜாமின் வழங்கி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GurmeetRamRahim
அரியானா:
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய கலவரத்தில் சிக்கி 38-க்கும் அதிகமானோர் பலியாகினர். பொதுச்சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்தது.
தனது ஆதரவாளர்கள் சுமார் 400 பேருக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் மீது ஒரு வழக்கு உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரி பஞ்ச்குலா சிபிஐ கோர்ட்டில் முறையிட்டிருந்தார்.
அவரது மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜகதீப் சிங், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஜாமின் பெற்றாலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளதால் அவர் சிறையில் இருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×