search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது குறித்து முதல்வருடன் கோவில் நிர்வாகம் இன்று ஆலோசனை
    X

    பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது குறித்து முதல்வருடன் கோவில் நிர்வாகம் இன்று ஆலோசனை

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து இன்று முதல்வர் பினராயி விஜயனுடன் கோவில் நிர்வாகம் ஆலோசிக்க உள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

    இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.



    உச்சநீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, கேரள முதல்மந்திரி பினராயி விஜயனை தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது பற்றியும், அவர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது பற்றியும் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. #Sabarimala #SabarimalaVerdict #Kerala
    Next Story
    ×