search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் - தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
    X

    ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் - தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    தெலுங்கானா மாநில எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    நகரி:

    கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கானா மாநில எம்.எல்.சி. (மேலவை) தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டுப் போட நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன் சன்னிடம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரூ. 5 கோடி பேரம் பேசி ரூ.50 லட்சம் முன் பணம் கொடுத்த வீடியோ வெளியானது.

    மேலும் ஸ்டீபன் சென்னிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேனில் பேசியதாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ரேவந்த்ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவந்த்ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.

    இந்த நிலையில் ரேவந்த் ரெட்டியின் ஐதராபாத் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் அவரது தொகுதியில் உள்ள வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

    Next Story
    ×