என் மலர்
செய்திகள்

இமாச்சல் கனமழையில் சிக்கி மாயமான 50 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக மீட்பு
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழையில் சிக்கிய 50 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HimachalFloods #HimachalRains
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை ராணுவம் மீட்டு வருகிறது. காட்டாற்று வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரூர்கே ஐ.ஐ.டி.யில் இருந்து 50 மாணவர்கள் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள லகுல் மலையில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
மாயமான மாணவர்கள் உள்பட அனைவரையும் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்கள் மீட்கப்பட்டு விடுவார்கள் என்றும் மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான 50 ஐ ஐ டி மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் கூறினர். #HimachalFloods #HimachalRains
Next Story






