என் மலர்

  செய்திகள்

  ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
  X

  ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #JammuKashmir #BusAccident #Modi
  புதுடெல்லி:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.  இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் நகரில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது சோக நிகழ்வாகும். விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார். #JammuKashmir #BusAccident #Modi
  Next Story
  ×