என் மலர்

  செய்திகள்

  வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் - பினராயி விஜயன்
  X

  வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் - பினராயி விஜயன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளா மாநிலம் வெள்ள பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு விடும் என நம்புவதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

  இந்நிலையில், வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளா மாநிலம் விரைவில் மீண்டு வரும் என நம்புவதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன்.

  கேரளாவில் பெய்துள்ள கனமழை மற்றும் வெள்ளத்தால் 5 லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22,034 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

  வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் விநியோகம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளம் வடிந்தால் தான் முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
  Next Story
  ×