என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய கனமழை - மீட்பு பணிகளுக்கு ராணுவ உதவி கோரிய முதல்வர்
By
மாலை மலர்9 Aug 2018 8:39 AM GMT (Updated: 9 Aug 2018 8:39 AM GMT)

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிக்கு ராணுவத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது. #KeralaRains #PinarayiVijayan
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்து விட்டன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மழைக்கு பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றும், இன்றும் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளன. இரண்டு நாட்களில் மட்டும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரைக் காணவில்லை.
இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், மீட்புப் பணிக்காக ராணுவ உதவி கோரப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் உதவி கோரப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaRains #ArmyHelpForKerala #PinarayiVijayan

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றும், இன்றும் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளன. இரண்டு நாட்களில் மட்டும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரைக் காணவில்லை.
இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், மீட்புப் பணிக்காக ராணுவ உதவி கோரப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் உதவி கோரப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaRains #ArmyHelpForKerala #PinarayiVijayan
Next Story
×