என் மலர்

  செய்திகள்

  அரசு சாலையை விட காட்டுப்பாதையே மேல் - கர்ப்பிணி பெண்ணை 12 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற கணவர்
  X

  அரசு சாலையை விட காட்டுப்பாதையே மேல் - கர்ப்பிணி பெண்ணை 12 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற கணவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திர மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த தனது மனைவியை ஊரார் உதவியுடன் காட்டுப்பாதை வழியே 12 கிலோ மீட்டர் தூரம் கணவர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #AndhraPradesh #NHRC
  ஐதராபாத்:

  ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் சாலை வசதிகள் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கலக்கமடைந்த கணவர் சாலை வசதி இல்லாததால் கிராமத்து மக்கள் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு தனது மனைவியை தூக்கிச் சென்றுள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டது.

  இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது. சாலை வசதி குறைபாட்டால் கர்ப்பிணிப் பெண் 12 கிலோ மீட்டர் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கும், தலைமை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. #AndhraPradesh #NHRC
  Next Story
  ×