search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதையும் தாங்கும் இதயம்: ஓ.பன்னீர் செல்வத்திடம் விளக்கம் கேட்கும் குஷ்பு
    X

    எதையும் தாங்கும் இதயம்: ஓ.பன்னீர் செல்வத்திடம் விளக்கம் கேட்கும் குஷ்பு

    எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என குஷ்பு வலியுறுத்தியுள்ளார். #Congress #Khushboo
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

    11. 15க்கு தொடங்கிய இந்த சந்திப்பு 11.45 வரை நேரம் நீண்டது. சந்திப்புக்கு பின் வெளியே வந்த குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:-

    கே:- ராகுல் காந்தியை சந்தித்த போது என்ன பேசினீர்கள்?

    ப:-ராகுல் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி கேட்டு அறிந்தார். அ.தி.மு.க. ஆட்சி பற்றி பேசினோம்.

    கே:-தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க அனுமதி மறுத்தது பற்றி?


    ப:-ஒரு துணை முதல்-அமைச்சர் நேரில் சென்ற பிறகும் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. எம்.பி.யை பார்த்ததாக சொல்கிறார்கள். துணை முதல்-அமைச்சரை சந்திப்பதற்கும் எம்.பி.யை சந்திப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?

    கே:-ஓ.பி.எஸ். அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

    ப:-இந்த வார்த்தைகளுக்கு ஓ.பி.எஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.

    கே:-ஓ.பி.எஸ். தம்பி சிகிச்சைக்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையாகி உள்ளதே?

    ப:-அவசரம், முக்கியம் என்னும்போது மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதில் தவறு இல்லை. ஆனால் இதே உதவி சாமானிய மக்களுக்கும் கிடைக்குமா என்பதை அரசு விளக்க வேண்டும்.

    கே:-ராகுல் பிரதம வேட்பாளர் பதவியை தியாகம் செய்ய துணிந்ததாக செய்தி வருகிறதே?

    ப:-காங்கிரசை பொறுத்தவரை ராகுல் தான் பிரதமர் வேட்பாளர். சில சந்தர்ப்பங்களில் வலுவான கூட்டணி அமைய அது விட்டுக்கொடுக்கப்படலாம். பதவி ஆசைக்காக காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யவில்லை.

    ஆனால் நேரம் வரும்போது தான் முடிவு செய்யப்படும். கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தி தான் பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

    ப:-இதை நான் முடிவு செய்ய முடியாது. கருத்து சொல்லவும் முடியாது. கட்சி தலைவர் என்ற பொறுப்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவர் தான் முடிவு செய்யவேண்டும்.

    கே:-தமிழக தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவரா?

    ப:-அதை ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த இந்திய அளவிலும் ராகுல் காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தபிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கேட்கும் கேள்விகள் எதற்குமே பா.ஜ.க.விடம் நேரடி பதில் இல்லை.

    2014-ல் மோடி கூறிய எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கில் பாதி கூட இப்போது இல்லை. அந்த பயம் பா.ஜ.கவினருக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே தான் ராகுல்காந்தி அறிக்கைக்காகவும் கேள்விக்காகவும் காத்திருந்து அரசியல் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #congress #RahulGandhi #OPS
    Next Story
    ×