என் மலர்
செய்திகள்

கிரிக்கெட் சங்க ஊழல் - காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா ஆகஸ்ட் 29-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #JammuKashmir #FarookAbdullah
ஸ்ரீநகர்:
ஐம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் சுமார் 113 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் குறித்து உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு முதல் விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மஜித் யாகூப் தார், நிசார் அகமது கான் ஆகியோர் ஐம்மு காஷ்மீர் ஐகோர்ட்டில் பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ, ஸ்ரீநகர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா உட்பட 4 பேர் மீது சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரியும், வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் பரூக் அப்துல்லா சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணைக்கே பரூக் அப்துல்லா நேரில் ஆஜராக வேண்டும் எனவும், ஆகஸ்ட் 29-ம் தேதி பரூக் அப்துல்லா நேரில் ஆஜராகி தனது தரப்பு கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #JammuKashmir #FarookAbdullah

Next Story