search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் செய்த காரியம் எனக்கு பிடிக்கவில்லை - சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிருப்தி
    X

    ராகுல் செய்த காரியம் எனக்கு பிடிக்கவில்லை - சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிருப்தி

    பாராளுமன்றத்தில் மோடி தன் இருக்கையில் அமர்ந்திருந்தபோது ராகுல் காந்தி கட்டிப்பிடித்த செயல் தனக்கு பிடிக்கவில்லை என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். #NoConfidenceMotion #RahulHugsModi
    புதுடெல்லி:

    மோடி அரசு மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி, மோடியை கடுமையாக தாக்கி பேசினார். இறுதியில் தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறிச் சென்று, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பிரதமர் மோடியும் ராகுலை அழைத்துக் கைகொடுத்தார்.



    இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டாலும், பாஜகவினரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்துவிட்டு, ராகுல் காந்தி தனது இருக்கையில் அமர்ந்து, கண்ணைச் சிமிட்டினார்.



    இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், ''ராகுல் காந்தியின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இந்த அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர். அவருக்கென மரியாதை உண்டு. அவர் நரேந்திரமோடி அல்ல, நாட்டின் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை விரும்பியிருக்கலாம். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை.

    அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி அமர்ந்த பின் கண்ணை சிமிட்டியது எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. சபையின் மாண்பைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். ராகுல் காந்தி எனக்கு மகன் போன்றவர். பிள்ளைகள் தவறு செய்தால், அதை தட்டிக்கொடுத்து, அவர்களை மெருகேற்றவேண்டியது தாயின் கடமையாகும்'' என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். #NoConfidenceMotion #IndiaTrustsModi #MonsoonSession #RahulHugsModi

    Next Story
    ×