search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் தொடரும் கற்பழிப்பு- மேலும் ஒரு பாதிரியார் மீது புகார்
    X

    கேரளாவில் தொடரும் கற்பழிப்பு- மேலும் ஒரு பாதிரியார் மீது புகார்

    கேரளாவில் குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி பெண்ணை கற்பழித்த பாதிரியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற ஒரு பெண்ணை மிரட்டி அந்த பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் அதே ஆலயத்தை சேர்ந்த 3 பாதிரியார்களும் அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் செய்ததை தொடர்ந்து 4 பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சூர் அருகே உள்ள முள்ளக்கல்லை சேர்தவர் பிராங்கோ. இவர் ஜலந்தரில் பி‌ஷப்பாக உள்ளார். இந்த பி‌ஷப் மீது கோட்டயம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்து உள்ளார். 2 வருடமாக தன்னை மிரட்டி 13 முறை பி‌ஷப் பிராங்கோ பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    இதைதொடர்ந்து அந்த பி‌ஷப்பை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். முன்னதாக இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பி‌ஷப்புக்கு நோட்டீசு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த 4 பாதிரியார்கள் மீது பாலியல் புகார் கூறப்பட்ட அதே கிறிஸ்தவ ஆலயத்தை சேர்ந்த இன்னொரு பாதிரியாரான பினுஜார்ஜ் என்பவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பாதிரியார் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழை மாவட்டத்தில் பாதிரியாராக பணிபுரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண் தனக்கும் தனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சினை பற்றி அந்த பாதிரியாரிடம் கூறி அதை தீர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் அந்த பாதிரியார் மாவேலிகரைக்கு மாற்றலாகி சென்றதால் அந்த பெண்ணை அங்குள்ள ஆலயத்திற்கு வரவழைத்து குடும்ப பிரச்சினையை தீர்க்க ஆலோசனை வழங்குவதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டார்.

    இதுபற்றி அந்த பெண் பி‌ஷப்பிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் பாதிரியார் பினு ஜார்ஜ் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததால் காயங்குளம் போலீசில் தற்போது அந்த பெண் புகார் செய்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து பாதிரியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் தொடர்ந்து பாதிரியார்கள் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×