என் மலர்
செய்திகள்

போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை - மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருட்களை கடத்தும், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற பஞ்சாப் மந்திரிசபை இன்று தீர்மானித்துள்ளது. #PunjabCabinet #deathpenalty #drugpeddlers
சண்டிகர்:
பஞ்சாப் மாநில அரசின் மந்திரிசபை கூட்டம் முதல் மந்திரி கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தை போதைப்பொருள் நடமாட்டமற்ற மாநிலமாக மாற்ற இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
போதைப் பொருட்களை கடத்தும், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பஞ்சாப் அரசின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். #PunjabCabinet #deathpenalty #drugpeddlers
Next Story






