என் மலர்
செய்திகள்

ராணுவ தளபதி மனைவி கொலை வழக்கில் சக ராணுவ மேஜர் கைது
டெல்லி கண்டோன்மென்ட் எல்லைக்குட்பட்ட சாலையில் நேற்று ராணுவ தளபதியின் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ராணுவ மேஜர் நிகில் ஹண்டா கைது செய்யப்பட்டுள்ளார். #ArmyMajorwifekilled #MajorArrested
லக்னோ:
டெல்லி கன்டோன்மெண்ட் எல்லைக்குட்பட்ட பிரார் சதுக்கம் சாலையில் நேற்று கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிரேதத்தை போலீசார் கண்டெடுத்தனர்.
இந்த மர்ம கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க சைலஜா விவேடி, இந்திய ராணுவத்தில் மேஜர் ஆக பணியாற்றி வரும் அதிகாரியின் மனைவி என்பதும், நேற்று காலை சுமார் 10 மணியளவில் இங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி சிகிச்சைக்காக சென்ற அரை மணி நேரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ராணுவ மேஜரின் மனைவி கொலை வழக்கில் நிகில் ஹண்டா என்ற சக ராணுவ மேஜர் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். #ArmyMajorwifekilled #MajorArrested
Next Story






