search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரைவிங் லைசென்சையும் ஆதாருடன் இணைக்க மத்திய அரசு முடிவு
    X

    டிரைவிங் லைசென்சையும் ஆதாருடன் இணைக்க மத்திய அரசு முடிவு

    நாட்டில் ஆதார் கார்டுடன், முக்கிய சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக டிரைவிங் லைசென்சையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #AadhaarCard #License
    டேராடூன்:

    மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று டேராடூனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்தில் வழிபாடுகள் செய்வதற்காக வந்தேன். நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்று நான் வழிபாடு செய்தேன்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆர்.எஸ்.எஸ். பற்றி தொடர்ந்து தவறான தகவல்களை சொல்லி வருகிறார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரது தந்தை, பாட்டி, பெரிய தாத்தா எல்லாரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அவமதித்தனர். ஆனால் இன்று அந்த இயக்கம் மறுமலர்ச்சி பெற்றுள்ளது.

    நாட்டில் ஆதார் கார்டுடன், முக்கிய சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக டிரைவிங் லைசென்சையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து நான் மத்திய போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியுடன் பேசி ஆலோசித்து வருகிறேன். எனவே விரைவில் ஆதாருடன் டிரைவிங் லைசென்சையும் இணைக்கும் பணி தொடங்கும்.

    ஆதார் அட்டையுடன் டிரைவிங் லைசென்சை இணைப்பதன் மூலம் தவறு செய்யும் வாகன ஓட்டிகள் யாரும் தப்ப முடியாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகி மக்களை கொன்று விட்டு வேறு மாநிலத்துக்கு சென்று தப்பி விடுகிறார்கள்.

    வேறு வேறு பெயர்களில் உள்ள டிரைவிங் லைசென்சு மூலம் தப்பி விடுகிறார்கள். ஆதாருடன் டிரைவிங் லைசென்சை இணைத்து விட்டால், அத்தகைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது.

    தவறு செய்யும் வாகன ஓட்டிகள் தங்கள் பெயரை மாற்றலாம். ஆனால் ஒரு போதும் தங்கள் கைரேகையை மாற்ற இயலாது.

    இவ்வாறு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #AadhaarCard #License
    Next Story
    ×