search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தல் வெற்றி - மேகாலயாவில் மீண்டும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்
    X

    இடைத்தேர்தல் வெற்றி - மேகாலயாவில் மீண்டும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்

    நாடு முழுதும் கடந்த 28-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் மேகாலயா சட்டமன்ற தொகுதியில் இன்று காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக மீண்டும் அக்கட்சி உருவெடுத்துள்ளது. #ByPoll
    ஷில்லாங்:

    மேகாலயாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அம்பாதி மற்றும் சாங்சாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகுல் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு தொகுதிகளில் அவர் வெற்றிபெற்றதை அடுத்து அம்பாதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

    இதனால், அம்மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தலா 20 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சமபலத்தில் இருந்தது. 

    இந்நிலையில் உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அம்பாதி தொகுதியும் அடங்கும்.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், அம்பாதி சட்டமன்ற தொகுதியில்  காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மேகலாய முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டசபை எதிர்கட்சி தலைவருமான முகுல் சங்மாவின் மகள் மியானி டி ஷிரா வெற்றி பெற்றா. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான மொமினை விட 3 ஆயிரத்து 192 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். 

    இந்த வெற்றியின் மூலம் 21 சட்டசபை உறுப்பினர்களுடன் மேகாலயா மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. 20 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் தேசிய மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #ByPoll
    Next Story
    ×