search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.வி.சேகரை ஜூன் முதல் வாரம் வரை கைது செய்ய தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
    X

    எஸ்.வி.சேகரை ஜூன் முதல் வாரம் வரை கைது செய்ய தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

    பெண் பத்திரிகையாளர்களை இழிவாக விமர்சித்தது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகரை ஜூன் முதல் வாரம் வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #SVEShekar #SC
    புதுடெல்லி:

    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து  பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் சமூக வலைதளத்தில் இழிவான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து எஸ்.வி. சேகரை போலீசார் கைது செய்யக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

    இதற்கிடையே பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதி நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.



    இதற்கிடையே எஸ்.வி. சேகரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடினார். முன்ஜாமீன் கோரிய அவரது மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகரை ஜூன் மாதம் முதல் வாரம் வரை கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #SVEShekar #SC
    Next Story
    ×