search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்- இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழப்பு
    X

    கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்- இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழப்பு

    கேரள மாநிலத்தை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.#NipahVirus #NipahSpreadsKerala #NipahPanic
    கோழிக்கோடு:

    கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அரிய வகை நிபா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இந்த வைரஸ் தாக்குதல் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பரவலாக உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இந்த வைரஸ் தாக்குதலுக்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வவ்வால்களால் பரவும் இந்த நிபா வைரஸ், மனிதர்கள் மற்றும் விலங்குகளை தாக்குவதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான மூளைக்காய்ச்சல் மற்றும் மூளைச்சாவு ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



    நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிகளின் ரத்த மாதிரி புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படுகின்றன.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வல்லுநர் குழு இன்று கோழிக்கோடு வந்து, நோயாளிகளை பரிசோதனை செய்ய உள்ளது. நோய் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.  #NipahVirus #NipahSpreadsKerala #NipahPanic
    Next Story
    ×