search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் எடியூரப்பா - அழைப்புக்கு காத்திருக்கும் குமாரசாமி
    X

    கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் எடியூரப்பா - அழைப்புக்கு காத்திருக்கும் குமாரசாமி

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிலையில் கவர்னரிடம் இருந்து அழைப்பை எதிர்பார்த்து குமாரசாமி காத்திருக்கிறார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

    அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    உணவு இடைவேளியின்போது எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா, 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை தயார் செய்தார். பிற்பகல் 3.30 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடியபோது, மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். அதன்பின்னர் எடியூரப்பா தனது உரையை வாசித்தார்.

    அப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    இதை தொடர்ந்து ராஜ் பவனுக்கு சென்ற அவர் கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

    இதற்கிடையே, சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒப்படைப்பதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார். அதன் பின்னர் சட்டசபை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி, ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நாங்கள் அவசரப்படவில்லை.

    கவர்னரிடம் இருந்து அழைப்புக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns
    Next Story
    ×