search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி, 2022-ல் புதிய இந்தியா உருவாகும் - அமித் ஷா நம்பிக்கை
    X

    மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி, 2022-ல் புதிய இந்தியா உருவாகும் - அமித் ஷா நம்பிக்கை

    பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும், 2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா உருவாகும் என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #karnatakaelection2018 #Modi #AmitShah
    புதுடெல்லி:

    கர்நாடகா தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. 99 இடங்களை பெற்று அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உயர்ந்துள்ளது. மேலும் அக்கட்சி வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    224 இடங்களை கொண்ட கர்நாடகா சட்டசபையில், தேர்தல் நடைபெற்ற 222 இடங்களில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான மந்திர எண்ணான 112 என்ற இலக்கத்தை நெருங்க முடியவில்லை. முன்னிலை வகித்து வரும் இடங்களையும் சேர்த்து மொத்தம் 104 இடங்களில் மட்டுமே அதிகபட்சமாக பா.ஜ.க. வேட்பாளர்கள் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


    இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலுகத்தில் அக்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, ’பா.ஜ.க. இதுவரை 14 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக 15-வது வெற்றியாக கர்நாடகா மாநில தேர்தல் அமையும்.

    வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது மட்டுமன்றி 2022-ம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என அவர் குறிப்பிட்டார்.

    அமித் ஷாவை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ’கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றியை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அதேவேளையில் வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்’ என குறிப்பிட்டார்.

    முன்னதாக பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த மோடியை, அமித் ஷா சால்வை அணிவித்து வரவேற்றார். அலுவலகத்தின் வாசலில் கூடியிருந்த பா.ஜ.க. தொண்டர்களை நோக்கி அமித் ஷாவும் மோடியும் உற்சாகத்துடன் கையசைத்தனர். #karnatakaverdict #karnatakaelection2018 #Modi #AmitShah
    Next Story
    ×