என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பா.ஜ.க பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி - பிரதமர் மோடி பேச்சு
By
மாலை மலர்4 May 2018 5:50 AM GMT (Updated: 4 May 2018 5:50 AM GMT)

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே பா.ஜ.க.வின் முக்கிய நோக்கம் என பிரதமர் மோடி கர்நாடகா பாஜக உறுப்பினர்களுடன் நமோ ஆப் மூலம் பேசினார். #KarnatakaElection2018 #PMModi #MahilaParaBJPSarkara
புதுடெல்லி:
கர்நாடக சட்டசபைத் தேர்தல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி கர்நாடகாவில் உள்ள பாஜக மகிளா மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களிடம் நமோ ஆப் மூலம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
'இந்தியா தற்போது பெண்களின் முன்னேற்றத்திலிருந்து, பெண்களால் முன்னேற்றம் என்ற நிலைமைக்கு வந்துள்ளது. பெண்கள் நாட்டின் முக்கிய பதவிகளில் உள்ளனர். உதாரணமாக பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முக்கிய மந்திரி பதவிகளில் உள்ளனர்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்கள் சக்தி மிக முக்கிய காரணமாக உள்ளது. பெண்களுக்கு முன்னுரிமை என்பது நமது கட்சியின் முக்கிய நோக்கம். இந்த கர்நாடகத்தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். கண்டிப்பாக வெற்றி பெறுவோம். கடினமாக உழைத்தால் வெற்றி கிட்டும். கர்நாடகா பாஜக உறுப்ப்பினர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாம் தவறான வாக்குறுதிகளை அளிக்காமல், வெற்றி பயணத்திற்கு மக்கள் அனைவரையும் அழைத்துச் செல்வோம்' என கூறினார்.
மேலும், மோடி உரையாற்றும் போது கர்நாடகாவைச் சேர்ந்த பல பெண் தலைவர்கள், சாதனையாளர்களின் பெருமை குறித்து பேசினார். #PMModi #KarnatakaElection2018 #MahilaParaBJPSarkara

Next Story
×