search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுடன் ரகசிய கூட்டணி இல்லை - தேவேகவுடா விளக்கம்
    X

    பா.ஜனதாவுடன் ரகசிய கூட்டணி இல்லை - தேவேகவுடா விளக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் ரகசிய கூட்டணி இல்லை என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா விளக்கம் அளித்து உள்ளார். #karnatakaassemblyelections #Devegowda
    பெங்களூரு:

    224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும் போராடி வருகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. குமாரசாமியின் ஐக்கிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 3-வது அணியாக போட்டியிடுகிறது.

    கருத்து கணிப்பு முடிவுகள் பலவாறு இருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும், பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறப்படுகின்றன. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் கணிப்புகள் வெளியாகியது.

    மெஜாரிட்டிக்காக பா.ஜனதா கட்சி மதசார்பற்ற ஜனதா தளத்துடன் ரகசிய உடன்பாடு வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தளத்துடன் பா.ஜனதா ரகசிய கூட்டணி வைத்து இருப்பதாக தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டினார்.

    பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பாராட்டி பேசினார். இதன் மூலம் இந்த இரு கட்சிகளுக்கும் மறைமுக உடன்பாடு இருப்பது உறுதியானது.

    இந்த நிலையில் பா.ஜனதாவுடன் ரகசிய கூட்டணி இல்லை என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தலுக்காக பா.ஜனதாவுடன் மத சார்பற்ற ஜனதா தளம் ரகசிய கூட்டணி வைத்து இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா பேசி வருகிறார். மேலும் அமித்ஷாவும், குமாரசாமியும் ஒரே விமானத்தில் பயணம் செய்ததையும் அவர் கூறுகிறார். இவை அனைத்தும் முற்றிலும் பொய்யாகும். சித்தராமையா கூறுவது உண்மையெனில் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்.

    பகுஜன் சமாஜ் கட்சியுடன் மட்டுமே மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. வேறு எந்த கட்சியிடனும் கூட்டணி இல்லை.

    கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் பா.ஜனதாவுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்று கூறப்படுவதிலும் உண்மை இல்லை. மதசார் பற்ற ஜனதா தளம் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். பா.ஜனதா உடனோ, காங்கிரசுடனோ எந்த காரணத்தை கொண்டும் கூட்டணி அமைக்க மாட்டோம்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #karnatakaassemblyelections #Devegowda


    Next Story
    ×