என் மலர்

  செய்திகள்

  ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை பாதுகாப்பு படை அழித்தது
  X

  ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை பாதுகாப்பு படை அழித்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் இரண்டு பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்ததுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் இரண்டு பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்ததுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தாரின் ஹரிபுடா மற்றும் பதிதார் பகுதிகளில் ராணுவத்தினரும், மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  அப்போது அந்த பகுதிகளில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகளின் இரண்டு பதுங்கு குழிகளை கண்டறிந்தனர். அங்கிருந்து இரண்டு பிஸ்டல், பல்வேறு வகையான கையெறி குண்டுகள், தகவல் தொடர்பு சாதனங்கள், வெடிபொருள்கள், ஏ.கே.-47 ரக துப்பாக்கி குண்டுகள் மற்றும் இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  Next Story
  ×