என் மலர்
செய்திகள்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது: ஜனாதிபதி உரை
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு உத்தேசித்திருப்பதாக பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். #BudgetSession #farmersloans
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
சாமானியர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசு தான் நல்ல அரசுக்கு அடையாளம். விறகு அடுப்பில் சமைத்த பெண்களின் கஷ்டங்கள் இந்த ஆட்சியில் துடைக்கப்பட்டுள்ளது. 3 கோடியே 30 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகளை ஏழைப் பெண்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளது. பிரவச கால விடுப்பு காலத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறது இந்த அரசு.
தொழில் தொடங்கும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறையால் இதுவரை 3 கோடி இளைஞர்கள் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகளின் துன்பங்களை கவனத்தில் கொண்டுள்ளது இந்த அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் உத்தேசித்துள்ளது.
உள்கட்டமைப்பு மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது அரசு கள்ளச்சந்தையில் நடைபெறும் யூரியா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாளை அடுத்த ஆண்டு கொண்டாடும்போது நாடு சுத்தமாக இருக்க வேண்டும். மின்சாரம் எட்டிப்பார்க்காத கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. சிறுதானிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட மக்களுக்கு அவர்களின் வாழ்விடங்களில் வேலைவாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமிய பெண்கள் யார் துணையும் இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதன் முறையாக வீடு கட்டும் திட்டங்களில் எளிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு வீடு கட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 800 அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதய நோயாளிகளுக்கான மருந்துகளில் 80% கட்டண சலுகை வழங்கப்படுகிறது. தடுப்பூசி திட்டங்களில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் நவீன மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. 2014ல் 56% கிராமங்களுக்கு மட்டுமே இருந்த சாலை வசதி, தற்போது 82% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #BudgetSession #farmersloans #tamilnews
Next Story






