என் மலர்
செய்திகள்

வெளிநாடு பயணம்: பிரதமர் மோடியுடன் சென்றவர்கள் யார் யார்? தலைமை தகவல் ஆணையர் உத்தரவு
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்போது, அவருடன் சென்றவர்கள் யார்? யார்? என்கிற பட்டியலையும், பயணச் செலவு உள்ளிட்ட விவரங்களை வழங்க பிரதமர் அலுவலகத்துக்கு தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டார். #Narendra Modi #ForeignVisit #CIC
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார். இந்த பயணங்களின் போது அவருடன் செல்லும் முக்கிய பிரமுகர்களின் பெயர் விவரங்களை வெளியிடவேண்டும் எனக்கோரி நீரஜ் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதே போல் அயுப் அலி என்பவர் பிரதமர் மோடியின் மாத வீட்டுச் செலவு, அவரை சந்திக்கும் வழிமுறை உள்ளிட்ட விவரங்களை கேட்டு மனு அளித்தார்.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்த இரு மனுக்களுக்கும் முறையாக பதில் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்துரிடம் மனு அளித்தனர்.

அவற்றை விசாரித்த அவர், “பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்போது, அவருடன் சென்ற அரசு சாரா நபர்கள் யார்? யார்? என்கிற பட்டியலையும், பிரதமர் மோடியின் பயணச் செலவு, தேர்தல் பிரசார செலவு உள்ளிட்ட விவரங்களையும் மனுதாரர் இருவருக்கும் அடுத்த 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்” என கூறி பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டார். #Narendra Modi #ForeignVisit #CIC #tamilnews

Next Story