என் மலர்
செய்திகள்

வேலை பார்க்கும் பெண்கள் குடும்பத்தின் சொத்து: இவாங்கா டிரம்ப் பெருமிதம்
வேலை பார்க்கும் பெண்கள், குடும்பத்தின் சொத்து என இவாங்கா டிரம்ப் பெருமிதத்துடன் கூறினார்.
ஐதராபாத்:
வேலை பார்க்கும் பெண்கள், குடும்பத்தின் சொத்து என இவாங்கா டிரம்ப் பெருமிதத்துடன் கூறினார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் 3 நாள் உலக தொழில் முனைவோர் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டிருக்கிறார்.
மாநாட்டின் 2-வது நாளான நேற்று தொழிலாளர் மேம்பாட்டில் புதுமை என்ற தலைப்பில் ஒரு அமர்வு நடைபெற்றது. இதில் இவாங்கா டிரம்ப் பங்கேற்று பேசினார். தொழில் நுட்பம் பெண்களுக்கு வாய்ப்பை தருகிறது
அப்போது அவர் கூறியதாவது:-
நவீன குடும்பங்களை ஆதரிக்கும் கொள்கைகள் நம்பத்தகுந்தவை என்று நான் கருதுகிறேன். நவீன தொழிலாளர்களையும், குடும்பங்களில் நவீன யதார்த்தத்தையும் ஆதரிக்கும் வழிகளைப் பற்றி நாம் சிந்திக்க தொடங்க வேண்டும். இதில் தொழில் நுட்பம் மிகப்பெரிய இயக்கியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
தொழில் தொடங்குவதில் உள்ள தடைகளை தொழில் நுட்பம் குறைத்துக்கொண்டிருக்கிறது. தொழில் நுட்பமானது, நெகிழ்வுத்தன்மையை உருவாக்குகிறது.
தொழில் நுட்பம், பெண்களுக்கும், பெண் தொழில் முனைவோருக்கும் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.
திறன் மேம்பாட்டு பயிற்சியும், பணியாளர் சக்தி மேம்பாடும் தேவைப்படுகிறது. பொருளாதார உண்மைகளுடன் வகுப்பறையில் என்ன கற்றுத்தரப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் ஆணாதிக்கம் செலுத்தப்படுகிற வேலைகளில் பெண்களையும் கூடுதலாக கொண்டு வந்து சமநிலையை உருவாக்க வேண்டும்.
அமெரிக்காவில் என்ஜினீயர்களில் 13 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள், கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுனர்களில் 24 சதவீதத்தினர்தான் பெண்கள். இனி வரும் காலத்தில் ஆண்-பெண் பாலின வேறுபாடு, சம்பளத்தில் ஏற்படுத்துகிற இடைவெளி அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.
நாம் இதை கவனிக்க வேண்டும். இதில் அமெரிக்க நிர்வாகம் மிகவும் கவனம் செலுத்துகிறது.
வேலை பார்க்கும் பெண்கள் நிதி ஆதரவைப் பொறுத்தமட்டில் குடும்பத்தின் சொத்தாக திகழ்கிறார்கள். பெண்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் இடையே ஐதராபாத் புறநகரில் உள்ள கோல்கொண்டா கோட்டையை இவாங்கா டிரம்ப் பார்வையிட்டார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இவாங்கா பாதுகாப்பையொட்டி கோல்கொண்டா கோட்டைக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கோல்கொண்டா கோட்டையில், தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்றுள்ள 1,500 பிரதிநிதிகளுக்கு தெலுங்கானா அரசு இரவு விருந்து அளித்து கவுரவித்தது.

Next Story