என் மலர்

  செய்திகள்

  கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகை ரம்யா போட்டி
  X

  கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகை ரம்யா போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அடுத்த ஆண்டு கர்நாடகாவில் நடை பெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட நடிகை ரம்யா திட்டமிட்டுள்ளார்.

  பெங்களூர்:

  நடிகை ரம்யா கர்நாடகாவில் முக்கிய அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார்.

  காங்கிரஸ் கட்சியில் உள்ள அவர், 2013-ம் ஆண்டு மாண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  அடுத்து 2014 பாராளுமன்ற தேர்தலிலும் அவரே காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், அதில் அவர் தோல்வி அடைந்தார். இருந்தாலும் தேசிய அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். காங்கிரசில் சமூக ஊடக தலைவராக அவர் இருந்து வருகிறார்.

  எம்.பி. தேர்தலில் தோற்றுவிட்டதால் இப்போது அவர் மாநில அரசியலுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. அப்போது எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

  அவர் மாண்டியா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இது சம்பந்தமாக பெங்களூர் ரூரல் பகுதி எம்.பி. சுரேஷ் கூறும்போது, மாண்டியா சட்டமன்ற தொகுதியில் ரம்யா போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறர்கள்.

  ரம்யா தற்போது மாநில மற்றும் தேசிய அரசியலில் தீவிரமாக இருக்கிறார். அவரை காங்கிரஸ் கட்சி சரியாக பயன்படுத்திக் கொள்ள உள்ளது. அவருக்கு மாண்டியா தொகுதியில் டிக்கெட் கொடுக்கப்படுமா? இல்லையா? என்பது பற்றி கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்று கூறினார்.

  மாண்டியா தொகுதியில் தற்போது நடிகர் அம்பரீஷ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் கூறும்போது, மேலிடம் கேட்டு கொண்டால் நான் மாண்டியா தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். அதே நேரத்தில் ரம்யாவை மாண்டியா வேட்பாளராக நிறுத்தினாலும் அதை நான் வரவேற்பேன் என்று கூறினார்.

  Next Story
  ×