என் மலர்

    செய்திகள்

    வயலில் வேலைப்பார்த்து கொண்டிருந்த பெண் சிறுத்தை புலி தாக்கி பலி
    X

    வயலில் வேலைப்பார்த்து கொண்டிருந்த பெண் சிறுத்தை புலி தாக்கி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மராட்டிய மாநிலம் ஜால்கியான் மாவட்டத்தில் வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த பெண் சிறுத்தை புலி தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை:

    வடக்கு மராட்டிய மாநிலத்தில் நாசிக் அருகே உள்ள வர்கேட் சாலிஸ்காவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தீபாலி ஜக்டாப் (வயது 25) இவர் சம்பவத்தன்று வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை புலி அவரை தாக்கி கொன்றது. 



    அவரது உடலை உள்ளூர் வாசிகள் சாலிஷ்கோன் அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    சிறுத்தை புலி தாக்கி கொன்ற பெண்ணிற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்  என சாலிஷ்கோன் துணை அதிகாரி சரத் பவார் கூறியுள்ளார்.
    Next Story
    ×