search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை: எல்பின்ஸ்டோன் நடைமேம்பாலத்தை கட்டமைக்கும் பணியில் ராணுவம்
    X

    மும்பை: எல்பின்ஸ்டோன் நடைமேம்பாலத்தை கட்டமைக்கும் பணியில் ராணுவம்

    மராட்டியம் மாநிலம் எல்பின்ஸ்டோன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் நெரிசல் ஏற்பட்டு 23 பேர் பலியான நிலையில், தற்போது அங்கு புதிய பாலம் அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர்.
    மும்பை:

    மராட்டியம் மாநிலம் மும்பை அருகே உள்ள எல்பின்ஸ்டோன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் மற்றும் மாநில அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    தவறான வதந்தி காரணமாக நெரிசல் ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவம் நடந்த அந்த இடத்தை மாநில முதல்வர் பட்நாவிஸ், பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

    அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், புதிய நடைமேம்பாலம் கட்டும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறினார். மேலும், இரண்டு புறநகர் ரெயில் நிலையங்களில் நடைமேம்பாலம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

    ஜனவரி மாதம் இறுதிக்குள் புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்படும் என பட்நாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    Next Story
    ×