என் மலர்

  செய்திகள்

  உ.பி: கற்பழிப்பை தடுத்ததால் தாக்கப்பட்ட பெண் பரிதாப பலி
  X

  உ.பி: கற்பழிப்பை தடுத்ததால் தாக்கப்பட்ட பெண் பரிதாப பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கற்பழிக்க முயன்ற நான்கு பேரை தடுத்ததால் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  லக்னோ:

  உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாமிலி மாவட்டத்தில் உள்ள பூரா என்ற கிராமத்தைச் சேர்ந்த 23-வயது பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் வீட்டிற்குள் நுழைந்து அப்பெண்ணை கற்பழிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள பெண் நான்கு பேரையும் தடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கினர்.  இதில் படுகாயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  மரணமடைந்த பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  Next Story
  ×