என் மலர்

    செய்திகள்

    காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ்காரர் உயிர் தியாகம்
    X

    காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ்காரர் உயிர் தியாகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் ஏட்டு ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டம் ஹாஜின் பகுதியில் உள்ள மொகலா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும், சிறப்பு போலீசாரும் அந்த இடத்துக்கு சென்றனர். அப்போது மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு போலீஸ் ஏட்டு ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது பெயர் ஜாகீர்அப்பாஸ், தாக்குதலில் சில போலீசாரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    Next Story
    ×