என் மலர்

  செய்திகள்

  ஜி.எஸ்.டி.யால் திருமணங்களுக்கு நெருக்கடி: மண்டபம், உணவு, வீடியோ கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்
  X

  ஜி.எஸ்.டி.யால் திருமணங்களுக்கு நெருக்கடி: மண்டபம், உணவு, வீடியோ கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கை மட்டும் அமலில் இருந்தது, ஆனால் இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரியும் சேர்ந்து கொண்டதால் திருமணங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டது.

  அப்போது திருமண சீசன் என்பதால் திருமண ஏற்பாடு செய்தவர்கள் செலவு செய்ய பணம் கிடைக்காமலும் வங்கியில் பணம் எடுக்க முடியாமலும் பாதிக்கப்பட்டனர்.

  மண்டப வாடகை உள்பட பல்வேறு இனங்களுக்கு பணம் கட்ட முடியாமலும் கடுமையாக அவதிப்பட்டனர். சிலர் திருமணத்தையே தள்ளி வைத்தனர்.

  இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அனைத்து விதமான பொருட்களுக்கும் செலவினங்களுக்கும் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

  ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வணிகம் செய்யும் அனைவரும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள்ளாகிறார்கள்.  நவம்பர் மாதம் (கார்த்திகை) திருமண சீசன் தொடங்குகிறது. ஜி.எஸ்.டி. வரியால் திருமண செலவுகளுக்கு நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

  திருமணத்துக்கு ஜவுளி-நகை வாங்குவது, மண்டபம், பந்தல், உணவு, வீடியோ, போட்டோ, பத்திரிகை விநியோகம் என அது தொடர்பான செலவுகளுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும்.

  இந்தியாவில் சாதாரண குடும்பத்தினர் கூட குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்கிறார்கள். ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்க பண பரிவர்த்தனைக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

  மேலும் மண்டபம், பந்தல், உணவு, வீடியோ, கேமரா போன்றவற்றை ஏற்பாடு செய்பவர்கள் அதற்கான பண வரவுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இதனால் அவற்றின் கட்டணங்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக நகை-ஜவுளிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என்பதால் செலவு அதிகரிக்கும்.

  கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கை மட்டும் அமலில் இருந்தது. இதனால் ஓரளவுக்கு திருமண செலவுகள் சமாளிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரியும் சேர்ந்து கொண்டதால் திருமணங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

  திருமண ஏற்பாடுகள் தொடர்பான மண்டப உரிமையாளர்கள் மற்றும் இதர கூட்டமைப்பினர் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரியால் திருமணத்துக்கு பயன்படுத்தும் பந்தல், ஷாப்பிங், வீடியோ, போட்டோ மட்டுமல்லாது கச்சேரி, பியூட்டி பார்லர் ஆகியவற்றுக்கான செலவு தொகையும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.

  திருமணத்துக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்களுக்கு ரசீது போட்டுத்தான் சப்ளை செய்ய முடியும். எனவே அதற்கு ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து செலுத்தும்போது அவற்றுக்கான செலவு தொகை அதிகரிக்கும். ரூ.500-க்கு மேல் செருப்பு வாங்கினால் கூட அதற்கும் 18 சதவீத வரி செலுத்த வேண்டும்.

  இதே போல் தங்கம், வைர நகைகளுக்கு 1.6 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

  5 நட்சத்திர ஓட்டலில் திருமண நிகழ்ச்சி நடத்தினால் அதற்கு 28 சதவீத கூடுதல் வரி செலுத்த வேண்டும். மண்டபம் மற்றும் புல்வெளிகளுக்கான கட்டணத்தில் கூட 18 சதவீத வரி செலுத்த வேண்டும். எனவே திருமண செலவுகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக திருமண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

  ஏற்கனவே இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் கூட திருமணத்தை ஆடம்பரமாக லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்துகிறார்கள். ஜி.எஸ்.டி. வரியால் இனி அவர்கள் எளிமையான முறையில் திருமணம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

  Next Story
  ×