என் மலர்

    செய்திகள்

    தீவிரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது - வெங்கையா நாயுடு
    X

    தீவிரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது - வெங்கையா நாயுடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தீவிரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது என கூறினார்.
    புதுடெல்லி:

    இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தீவிரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது என கூறினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தீவிரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது. மதத்தின் பெயரை பயன்படுத்தி இளைய தலைமுறையினர் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். ஆயுதப்போராட்டம் நடத்திய பின் அரசியலில் ஈடுபட்டு இலக்கை அடைய முயற்சிப்போரை மக்கள் ஆதரிக்கக்கூடாது. ஜனநாயகத்தில் தோட்டாக்கள் மாற்றத்தை ஏற்படுத்தும், ஆனால் அது தொடர்ந்து நிலைத்திருக்காது. தோட்டாக்களை விட வாக்குச்சீட்டுகளே வலிமையானது என நிருபிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×